- இந்திய அரசானது அவசரகால கடன் உறுதித் திட்டத்தினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
- இது பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் வர்த்தகத்திற்கு உதவியாக இருக்கும்.
ECLGS 4.0 பற்றிய தகவல்கள்
- மருத்துவமனை / மருந்தகங்கள் / மருத்துவக் கல்லூரிகள் / மருந்தகக் காப்பகங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்க வாங்கப் படும் 2 கோடி வரையிலான கடன்களுக்கு 100% உத்தரவாதம் வழங்கப்படும்.
- இந்தக் கடனினை வளாகத்திற்குள்ளேயே ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்கவும் வேண்டி பயன்படுத்தலாம்.
- இந்த கடன்கள் மீதான வட்டி வீதம் 7.5% ஆகும்.
- ECLGS 1.0 திட்டத்தின் கீழ் ஏற்கனவே கடன் பெற்றவர்கள் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 அன்று நிலவரப் படி நிலுவையில் இருக்கும் கடனில் 10% வரை கூடுதலாக கடன் உதவியினைப் பெறலாம்.
- ECLGS 3.0 திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 500 கோடி ரூபாய் எனும் நிலுவைக் கடன் உச்ச வரம்பானது நீக்கப்பட உள்ளது.
- சிவில் (பொது) விமானத் துறையானது ECLGS 3.0 திட்டத்தின் கீழ் கடன்பெற தகுதி பெறும்.
- ECLGS திட்டத்தின் திட்டக் காலம் 30.09.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.