மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஆனது மூன்றாவது பிரிவில் மின்னணுக் கூறுகள் உற்பத்தி திட்டத்தின் (ECMS) கீழ் 22 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
இந்த 22 திட்டங்கள் இந்தியா முழுவதும் மொத்தம் 34,061 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
டாடா எலக்ட்ரானிக்ஸ், மதர்சன் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகியவற்றின் மூன்று திட்டங்களிலிருந்து தமிழ்நாட்டில் மட்டும் 23,451 வேலைவாய்ப்புகள் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் யுஜான் தொழில்நுட்பத் திட்டம் ECMS திட்டத்தின் இந்த பிரிவின் கீழ் மிகப்பெரிய ஒப்புதலைப் பெற்றது.
மூன்றாவது பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த முதலீடு 41,863 கோடி ரூபாய் ஆகும்.
இதில், 27,166 கோடி ரூபாய் மதிப்புள்ள திரட்டு முதலீடு தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே வருகிறது.