TNPSC Thervupettagam

ECOSOCன் 80 ஆண்டுகள்

January 28 , 2026 4 days 43 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக மன்றமானது (ECOSOC) தனது 80வது ஆண்டு நிறைவை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று கொண்டாடியது.
  • ECOSOC என்பது ஐ.நா.வின் ஆறு முக்கிய அங்கங்களில் ஒன்றாகும்.
  • இது 1945 ஆம் ஆண்டில் ஐ.நா. சாசனத்தின் கீழ் நிறுவப்பட்டது மற்றும் அதன் முதல் கூட்டம் 1946 ஜனவரி 23 அன்று லண்டனில் நடைபெற்றது.
  • ECOSOC உலகளாவியப் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் கொள்கைகளை ஒருங்கிணைக்கிறது.
  • உயர் மட்ட அரசியல் மன்றத்தின் மூலம் நிலையான வளர்ச்சி இலக்குகளின் (SDGs) முன்னேற்றத்தை இது மீளாய்வு செய்கிறது.
  • அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக மன்றம் (ECOSOC) 6,500க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களுக்கு (NGOs) ஆலோசனை வழங்கும் தகுதியை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்