ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக மன்றமானது (ECOSOC) தனது 80வது ஆண்டு நிறைவை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று கொண்டாடியது.
ECOSOC என்பது ஐ.நா.வின் ஆறு முக்கிய அங்கங்களில் ஒன்றாகும்.
இது 1945 ஆம் ஆண்டில் ஐ.நா. சாசனத்தின் கீழ் நிறுவப்பட்டது மற்றும் அதன் முதல் கூட்டம் 1946 ஜனவரி 23 அன்று லண்டனில் நடைபெற்றது.
ECOSOC உலகளாவியப் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் கொள்கைகளை ஒருங்கிணைக்கிறது.
உயர் மட்ட அரசியல் மன்றத்தின் மூலம் நிலையான வளர்ச்சி இலக்குகளின் (SDGs) முன்னேற்றத்தை இது மீளாய்வு செய்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக மன்றம் (ECOSOC) 6,500க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களுக்கு (NGOs) ஆலோசனை வழங்கும் தகுதியை வழங்குகிறது.