Ecozen – ஆசியாவின் முதலாவது குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட பசுமை துத்த நாகம் தயாரிப்பு
July 29 , 2024 287 days 315 0
இந்துஸ்தான் சிங்க் நிறுவனமானது குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட EcoZen எனப்படும் ஆசியாவின் முதல் பசுமை துத்தநாக தயாரிப்பு நிறுவனத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்துஸ்தான் சிங்க் நிறுவனமானது ஒருங்கிணைந்த துத்தநாக உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தி நிறுவனமாகும்.
இந்நிறுவனம் ஆனது புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி இதனை உற்பத்தி செய்கிறது.
EcoZen நிறுவனத்தின் கார்பன் உமிழ்வானது உலக சராசரியை விட சுமார் 75 சதவீதம் குறைவாக உள்ளது.
EcoZen ஒவ்வொரு டன் துத்தநாகத்திற்கும் என்று ஒரு டன்னுக்கும் குறைவான கார்பன் உமிழ்வினையே வெளியிடுகிறது.
ஒரு டன் எஃகு உருக்க செயல்முறையில் ஈகோசென் பயன்படுத்துவதால், சுமார் 400 கிலோ கிராம் கார்பன் வெளியேற்றம் தவிர்க்கப்படும்.