TNPSC Thervupettagam

eDAR இணையதளம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு

October 14 , 2026 10 days 107 0
  • சாலை விபத்துத் தரவுகளை மின்னணு விரிவான விபத்து அறிக்கை (eDAR) இணைய தளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யவும், அதனை வாகன் (VAHAN), சாரதி (SARATHI) மற்றும் காப்பீட்டு தகவல் பணியகம் (IIB) ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கவும் மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • விபத்து அறிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கவும், மோட்டார் விபத்து இழப்பீடு கோருதல்களுக்கு ஆதரவளிக்கவும் தேசிய தகவலியல் மையம் (NIC) eDAR இணைய தளத்தை இயக்குகிறது.
  • வாகன் வாகனப் பதிவு விவரங்களையும், சாரதி ஓட்டுநர் உரிம விவரங்களையும் சேமிக்கின்றன, மேலும் IIB காப்பீடு தொடர்பான தரவுகளைப் பராமரிக்கிறது.
  • PM-RAHAT திட்டமானது, சாலை விபத்து ஏற்பட்ட ஏழு நாட்கள் வரை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சையை வழங்குகிறது.
  • ஒருங்கிணைப்பை நிறைவு செய்து, இணக்க அறிக்கைகளைச் சமர்ப்பிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நான்கு வார கால அவகாசம் அளித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்