Education and Nutrition: Learn to Eat Well அறிக்கை
April 1 , 2025 288 days 294 0
யுனெஸ்கோ அமைப்பானது, Education and Nutrition: Learn to Eat Well என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகளவில் பள்ளி உணவுகளில் சுமார் 27 சதவீதம் ஆனது, ஊட்டச்சத்து நிபுணர்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை என்பதை இந்த ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
மதிப்பீடு செய்யப்பட்ட 187 நாடுகளில், 93 நாடுகளில் மட்டுமே பள்ளிகளில் வழங்கப் படும் உணவு குறித்து குறிப்பிட்ட வகையான ஒரு சட்டம் அல்லது வழிகாட்டுதல்களும் இருந்தன.
பள்ளிகளில் வழங்கப்படும் உணவானது, சேர்க்கை விகிதங்களை சுமார் 9 சதவீதமும், வருகையினை 8 சதவீதமும் அதிகரித்து, கற்றலை நன்கு மேம்படுத்தியதாக ஆய்வுகள் காட்டுகின்றன.