“ELECRAMA 2020” என்ற நிகழ்ச்சியானது நொய்டாவில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியானது இந்திய மின் தொழில் துறையின் புதுமைகளையும் சாதனைகளையும் எடுத்துக் காட்டுகின்றது.
“ELECRAMA” தளமானது இந்திய மின் மற்றும் மின்னணு உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் (IEEMA - Indian Electrical and Electronics Manufacturers’ Association) ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இது மத்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம், மத்திய மின்சாரத் துறை அமைச்சகம், மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம் போன்ற பிற அமைச்சகங்களினால் ஆதரிக்கப் படுகின்றது.
மின் தொழில் துறை பற்றி
இந்தியா மூன்றாவது மிகப்பெரிய மின்சார உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் நாடாக விளங்குகின்றது.
நாட்டின் தேசிய மின் தொடரானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப் படி, 368.79 ஜிகா வாட் திறன் கொண்டதாக உள்ளது.
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின் ஆற்றலில் 41.16% மின் ஆற்றல் தொழில்துறை நோக்கங்களுக்காகவும் 24.76% மின் ஆற்றல் வீட்டு உபயோக நோக்கங்களுக்காகவும் 17.69% மின் ஆற்றல் விவசாய நோக்கங்களுக்காகவும் 8.24% மின் ஆற்றல் வணிக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப் படுகின்றது.
மொத்தமுள்ள 368.79 ஜிகா வாட்டில், தனியார் துறையின் மின் உற்பத்தியானது 46% ஆக உள்ளது.