EPFO-ன் செயல்பாடுகளை ஆய்வு செய்ய பாராளுமன்றக் குழு
October 24 , 2018 2460 days 764 0
ஓய்வூதிய நிதிப் பிரிவான தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (Employees Provident Fund Organisation) செயல்பாடு, அதன் உள்ளடக்கம் மற்றும் நிலுவைத் தொகை மீட்டெடுப்பு ஆகியவற்றை பாராளுமன்றக் குழு ஆய்வு செய்யும்.
தொழிலாளர் குறித்த பாராளுமன்ற நிலைக்குழுவும் தொழிலாளர் சட்டத்தின் செயல்படுத்துதல், சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களின் நல்வாழ்வுத் திட்டங்களை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தக் குழுவானது பா.ஜ.க எம்பியான கிரித் சாமையாவின் தலைமையில் அமைந்துள்ளது.
தற்பொழுது EPFO ஆனது நாட்டில் உள்ள ஒரே வருங்கால வைப்புநிதி (PF – Provident Fund) அமைப்பு அல்லது கட்டுப்படுத்தும் அமைப்பாக இல்லை.
தனியார் நிறுவனங்கள்/அமைப்புகள்/பொதுத்துறை நிறுவனங்களின் வருங்கால வைப்பு நிதிகள் இந்த EPFO-ன் வரம்புக்குள் வருவனவாகும்.