தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஊதிய உச்சவரம்பை மாதம் ₹15,000 என்பதிலிருந்து ₹25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் கூடுதலாக 51 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் கட்டாய EPFO வரம்பின் கீழ் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF), தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் (EPS) மற்றும் தொழிலாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI) ஆகிய நன்மைகளுக்கான அணுகலை விரிவுபடுத்தும்.
இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஊதிய உச்சவரம்பு ₹6,500 லிருந்து ₹15,000 ஆக உயர்த்தப்பட்டது.
இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ₹11,339 கோடியும், ஐந்து ஆண்டுகளில் சுமார் ₹56,696 கோடியும் கூடுதல் செலவினமாக மதிப்பிடப்பட்டுள்ளது.