ERSS - 112 மற்றும் பிரகார் குற்றத் தடுப்பு வாகனங்கள் – தில்லி
October 1 , 2019 2058 days 800 0
மத்திய உள்துறை அமைச்சகமானது தில்லியில் அவசர காலப் பதிலெதிர்ப்பு ஆதரவு அமைப்பின் (Emergency Response Support System / ERSS -112) உதவி எண் மற்றும் பிரகார் (PRAKHAR) என்ற தெருவோர குற்றத் தடுப்பு ரோந்து வாகனங்கள் ஆகியவற்றை தில்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
காவல் துறை, தீயணைப்பு மற்றும் அவசர கால ஊர்தி போன்ற அவசர சேவைகளுக்காக, நாடு தழுவிய, ஒற்றை அவசர எண்ணாக ERSS - 112 என்ற உதவி எண் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இது இதர மூன்று அவசர கால உதவி எண்களைப் படிப்படியாக நீக்க இருக்கின்றது.
அவசர கால சேவைகளுக்கான இந்த ஒற்றை எண்ணானது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள “112” என்ற எண் மற்றும் அமெரிக்காவில் உள்ள “911” என்ற எண் ஆகியவற்றைப் போன்றது.
ERSS - 112ஐ ஏற்றுக் கொண்ட 19வது மாநிலம் / ஒன்றியப் பிரதேசமாக புது தில்லி உருவெடுத்துள்ளது.
பிரகார் என்பது, குற்றம் நிகழும் முக்கியமான இடங்களில் ரோந்து செல்வதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தெருவோர குற்றத் தடுப்பு ரோந்து வாகனமாகும்.
பிரகார் வாகனங்கள் வழக்கமான ரோந்து வாகனங்களிலிருந்து வேறுபடுகின்றன. ஏனெனில் இந்த வாகனங்கள் அதிக ஆயுதங்களைக் கொண்டு செல்கின்றன.மேலும் இவை நவீன தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன.