TNPSC Thervupettagam
February 12 , 2026 13 hrs 0 min 20 0
  • தேசியப் புள்ளி விவரங்கள் அலுவலகம் (NSO), eSankhyiki தளத்திற்கான மாதிரி சூழல் நெறிமுறை (MCP) சேவையகத்தின் பீட்டா பதிப்பை அறிமுகப்படுத்தியது.
  • eSankhyiki என்பது இந்தியாவின் அதிகாரப் பூர்வப் புள்ளி விவரங்களுக்கான தேசிய அளவிலான தளம் ஆகும்.
  • இந்த நெறிமுறையானது கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யாமல் தரவுத் தொகுப்புகளுக்கான AI அடிப்படையிலான, நிகழ்நேர அணுகலை அனுமதிக்கிறது.
  • பீட்டா வெளியீட்டில் வருடாந்திர தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு (PLFS), நுகர்வோர் விலைக் குறியீடு (CPI), தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP), தேசிய கணக்கு புள்ளி விவரங்கள், மொத்த விலைக் குறியீடு (WPI), தொழில்துறைகளின் வருடாந்திரக் கணக்கெடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் புள்ளி விவரங்கள் போன்ற தரவுத் தொகுப்புகள் அடங்கும்.
  • இந்த முயற்சி தரவு சார்ந்த நிர்வாகம் மற்றும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கான பரந்த அணுகலை ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்