இந்தியாவின் அவசரகால கணினி எதிர்வினை அணியானது (CERT - Computer Emergency Response of Team) “EventBot” என்று அழைக்கப்படும் ஒரு புதிய தீம்பொருளுக்கு எதிராக ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
CERT அமைப்பின்படி இந்தத் தீம்பொருள் ஆனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ள கைபேசிப் பயன்பாட்டாளர்களிடமிருந்து சுயவிவர நிதியியல் தொடர்பான தகவல்களைத் திருடுகின்றது.
“EventBot” தீம்பொருளானது ட்ரோஜனைப் பரப்புகின்றது.
CERT ஆனது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.