58வது புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஒரு நாட்டின் ஈர்ப்புத் திறன் குறியீட்டில் இந்தியா தனது 3வது இடத்தினைத் தக்க வைத்துள்ளது.
இந்தக் குறியீடானது எர்ன்ஸ்ட் & யங் என்ற அமைப்பினால் வெளியிடப் பட்டது.
இந்த அறிக்கையின்படி, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகியவை தனது முதல் 3 இடங்களைத் தக்க வைத்துள்ளன.
2021 ஆம் ஆண்டிற்கான இந்தக் குறியீடானது உலகின் 40 முன்னணி உலக நாடுகளை அதனுடைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முதலீடு மற்றும் பயன்பாட்டு வாய்ப்புகளை ஈர்க்கும் திறனைப் பொறுத்து மதிப்பிடுகின்றது.