EY நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஒரு நாட்டின் ஈர்ப்பு நிலை குறித்த குறியீட்டில் நமது இந்திய நாடானது மூன்றாவது இடத்திற்கு (நான்காவது இடத்திலிருந்து) நகர்ந்துள்ளது.
சூரிய ஆற்றலூட்டப்பட்ட ஒளி மின்னழுத்த கல உற்பத்தித் துறையில் ஆற்றிய மகத்தான செயல்திறனின் காரணமாக இந்த நிலையை எட்ட முடிந்தது.
இந்தக் குறியீட்டில் அமெரிக்கா தனது முதலிடத்தையும் சீனா தனது இரண்டாம் இடத்தையும் தக்க வைத்து கொண்டுள்ளன.
சமீபத்தில் அமெரிக்காவினால் ஏற்பாடு செய்யப்பட்ட காலநிலை உச்சி மாநாட்டில் 2030 ஆம் ஆண்டுக்குள் 450 GW திறனுடைய புதுப்பிக்கத் தக்க ஆற்றல் நிலையங்களை அமைப்பதற்கு இந்திய நாடானது உறுதி பூண்டுள்ளது.