TNPSC Thervupettagam
October 3 , 2026 3 days 63 0
  • இத்தாலியின் ரோமில் நடைபெற்ற COFO 28 கூட்டத்தில், நிலையான வன மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு ஆகியவற்றில் தனது சாதனைகளை இந்தியா எடுத்துரைத்தது.
  • வனவியல் குழு (COFO) என்பது உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) கீழ் உள்ள வனவியல் தொடர்பான மிக உயர்ந்த உலகளாவிய அரசுகளுக்கிடையேயான சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • COFO அமைப்பானது 128 FAO உறுப்பினர்களைக் கொண்டுள்ளது; இது ரோமில் உள்ள FAO தலைமையகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது.
  • COFO 28 கூட்டத்தின் கருத்துரு Forests for food, resilience and prosperity என்பதாகும்.
  • இந்தியாவின் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 82.74 மில்லியன் ஹெக்டேரை எட்டியுள்ளது. இது அதன் நிலப்பரப்பில் 25.17% ஆகும்.
  • FAO உலகளாவிய வன வள மதிப்பீடு (FRA) 2025-இன் படி, மொத்த வனப்பரப்பில் உலக அளவில் 9வது இடத்தையும், நிகர ஆண்டு வனப்பரப்பு அதிகரிப்பில் 3வது இடத்தையும் இந்தியா பெற்றுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்