FAO-WHOவின் ஆசியாவிற்கான 21வது ஒருங்கிணைப்புக் கூட்டம் – 2019
September 30 , 2019 2141 days 761 0
2019 ஆம் ஆண்டிற்கான உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agriculture Organisation - FAO) மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organisation - WHO) ஆசியாவிற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் 21வது கூட்டம் கோவாவில் நடத்தப்பட்டது.
இது ஆசியாவிற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் இரண்டாவது அமர்வாகும்.
இந்த அமர்வின் நோக்கமானது இப்பிராந்தியத்தில் உணவுப் பொருள் உற்பத்தியில் உணவுப் பாதுகாப்பிற்காக சிறந்த நடைமுறைகளை ஆராய்ந்து அதில் உள்ள விவகாரங்களை அடையாளம் காண்பதாகும். இந்த அமர்வில் 18 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இது ஐக்கிய நாடுகளின் உணவு & விவசாய நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்டதாகும்.