இத்தாலியின் ரோமில் நடைபெற்ற COFO 28 கூட்டத்தில், நிலையான வன மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு ஆகியவற்றில் தனது சாதனைகளை இந்தியா எடுத்துரைத்தது.
வனவியல் குழு (COFO) என்பது உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) கீழ் உள்ள வனவியல் தொடர்பான மிக உயர்ந்த உலகளாவிய அரசுகளுக்கிடையேயான சட்டப்பூர்வ அமைப்பாகும்.
COFO அமைப்பானது 128 FAO உறுப்பினர்களைக் கொண்டுள்ளது; இது ரோமில் உள்ள FAO தலைமையகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது.
COFO 28 கூட்டத்தின் கருத்துரு Forests for food, resilience and prosperity என்பதாகும்.
இந்தியாவின் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 82.74 மில்லியன் ஹெக்டேரை எட்டியுள்ளது. இது அதன் நிலப்பரப்பில் 25.17% ஆகும்.
FAO உலகளாவிய வன வள மதிப்பீடு (FRA) 2025-இன் படி, மொத்த வனப்பரப்பில் உலக அளவில் 9வது இடத்தையும், நிகர ஆண்டு வனப்பரப்பு அதிகரிப்பில் 3வது இடத்தையும் இந்தியா பெற்றுள்ளது.