TNPSC Thervupettagam

FASTag-இன் ஒன் டேக் (One Tag) முறை

September 13 , 2026 9 hrs 0 min 19 0
  • பயனர்கள் தங்களது FASTag அட்டையை மாற்றாமலேயே அதை வழங்கும் வங்கியை மாற்றுவதற்கு அனுமதிக்கும் ஒன் டேக் (One Tag) முறையை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று மும்பையில் நடைபெற்ற உலகளாவிய ஃபின்டெக் ஃபெஸ்ட் 2026-இல் தொடங்கி வைத்தார்.
  • அலைபேசி எண் பெயர்வுத்திறனைப் போலவே செயல்படும் இந்த ஒன் டேக் முறை, பயனர்கள் தங்கள் FASTag-ஐ டிஜிட்டல் முறையில் புதிய வங்கிக்கு மாற்ற அனுமதிக்கிறது.
  • பயனர்கள் 'ராஜ்மார்க் யாத்ரா' (Rajmarg Yatra) அலைபேசி செயலி மூலம் புதிய வங்கிக் கணக்குடன் இணைப்பதன் வழியாக தங்களின் தற்போதைய FASTag-ஐ மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது.
  • சுங்கக் கட்டணங்களை தானாகவே கழிப்பதற்கு FASTag ரேடியோ அலைவரிசை அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
  • சுமார் 13 கோடி FASTag-கள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் தேசிய நெடுஞ்சாலைப் பயனர் கட்டணங்களில் 98%-க்கும் மேலாக டிஜிட்டல் சுங்கக் கட்டண வசூல் உள்ளடக்கியுள்ளது.
Caption

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்