நிதி நடவடிக்கை பணிக்குழுவானது (FATF), அதன் சமீபத்திய கூட்டத்திற்குப் பிறகு குவைத் மற்றும் பப்புவா நியூ கினியாவை தனது 'சாம்பல் நிறப் பட்டியலில்' (கண்காணிப்புப் பட்டியல்) சேர்த்துள்ளது.
பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதி அளித்தல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்த நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இப்பட்டியலில் உள்ள நாடுகள், அக்குறைபாடுகளைச் சரிசெய்ய கால வரையறைக்கு உட்பட்ட செயல் திட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.
கடுமையான கட்டுப்பாடுகள் தேவைப்படும் 'அதி-ஆபத்து கொண்டவை' பட்டியலில் ஈரான், வடகொரியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நீடிக்கின்றன.