FATF அமைப்பின் 'வழக்கமான கண்காணிப்பு நிலையில் உள்ள நாடுகள்' பட்டியல்
July 1 , 2024 406 days 345 0
2023-24 ஆம் ஆண்டில் நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழு (FATF) நடத்திய பரஸ்பர மதிப்பீட்டில் இந்தியா சிறப்பான மதிப்பினைப் பெற்றுள்ளது.
இது இந்தியாவினை 'வழக்கமான கண்காணிப்பு நிலையில் உள்ள நாடுகள்' பிரிவில் வைக்கிறது என்ற நிலையில் நான்கு G20 நாடுகள் மட்டுமே இந்த அந்தஸ்தினைப் பகிர்ந்து கொள்கின்றன.
இந்தியா ஏற்கனவே FATF வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினராக உள்ளது.
நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழு (FATF) என்பது 1989 ஆம் ஆண்டில் ஒரு சர்வதேச கண்காணிப்பு அமைப்பாக நிறுவப்பட்ட ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
இது பணமோசடி, பயங்கரவாத நிதியுதவி மற்றும் சர்வதேச நிதி அமைப்பின் நேர்மைக்கு தொடர்புடைய பிற அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா 2010 ஆம் ஆண்டில் FATF அமைப்பில் உறுப்பினராக மாறியது.