TNPSC Thervupettagam

FATF சாம்பல் நிறப் பட்டியல் புதுப்பிப்பு

March 31 , 2026 12 hrs 0 min 29 0
  • நிதி நடவடிக்கை பணிக்குழுவானது (FATF), அதன் சமீபத்திய கூட்டத்திற்குப் பிறகு குவைத் மற்றும் பப்புவா நியூ கினியாவை தனது 'சாம்பல் நிறப் பட்டியலில்' (கண்காணிப்புப் பட்டியல்) சேர்த்துள்ளது.
  • பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதி அளித்தல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்த நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இப்பட்டியலில் உள்ள நாடுகள், அக்குறைபாடுகளைச் சரிசெய்ய கால வரையறைக்கு உட்பட்ட செயல் திட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.
  • கடுமையான கட்டுப்பாடுகள் தேவைப்படும் 'அதி-ஆபத்து கொண்டவை' பட்டியலில் ஈரான், வடகொரியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நீடிக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்