4வது நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழுவின் (FATF) நிறை அமர்வுக் கூட்டம் ஆனது பாரிஸில் மெக்சிகோ அதிபர் எலிசா டி அண்டா மட்ராசோவின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
ஜமைக்கா மற்றும் நைஜீரியா ஆகியவை முதல் முறையாக FATF நிறை அமர்வுக் கூட்டம் மற்றும் பணிக்குழு கூட்டங்களில் கென்யாவுடன் இணைந்து விருந்தினர் நாடுகள் முன்னெடுப்பின் கீழ் இணைந்தன.
பெல்ஜியம் மற்றும் மலேசியாவிற்கான பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கைகளை ஒரு புதிய காலக்கெடு, ஆபத்து அடிப்படையிலான மதிப்பீட்டு முறையின் கீழ் நிறை அமர்வுக் கூட்டம் ஏற்றுக் கொண்டது.
புர்கினா பாசோ, மொசாம்பிக், நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை அவற்றின் செயல் திட்டங்களை நிறைவு செய்த பிறகு அதிகரித்த கண்காணிப்பின் கீழ் உள்ள நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செயற்கை நுண்ணறிவுப் போலி உருவங்கள் போன்றவற்றிலிருந்து எழும் சட்டவிரோத நிதி அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கான சொத்து மீட்பு மற்றும் முதற்கட்ட ஆய்வு/ஹாரிசன் ஸ்கேன் குறித்த புதிய வழிகாட்டுதலையும் நிறை அமர்வுக் கூட்டம் அங்கீகரித்தது.