வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதற்காக, 'வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026'-ஐ அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு நிதியைப் பெறும் அமைப்புகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.
ஒரு அமைப்பின் FCRA பதிவு ரத்து செய்யப்பட்டால் அல்லது காலாவதியானால், அவற்றின் வெளிநாட்டு நிதி மற்றும் சொத்துக்களைக் கட்டுப்படுத்த ஒரு குறிப்பிட்ட அதிகாரம் உருவாக்கப்படும்.
FCRA பதிவு முறையாகப் புதுப்பிக்கப்படாவிட்டால், அது தானாகவே ரத்து செய்யப் படும்.
நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் (இயக்குநர்கள், அறங்காவலர்கள்) வெளிநாட்டு நிதியை முறையாகப் பயன்படுத்துவதற்குத் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக்கப்படுவார்கள்.
இது நிதியைப் பயன்படுத்துவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கிறது மற்றும் இடை நீக்கம் செய்யப்பட்ட அமைப்புகள் தங்களின் சொத்துக்களை விற்பனை செய்யவோ அல்லது மாற்றவோ தடை விதிக்கிறது.