TNPSC Thervupettagam
July 5 , 2025 14 hrs 0 min 18 0
  • மேம்பாட்டிற்கான நிதியுதவி குறித்த 4வது சர்வதேச மாநாடு (FfD4) ஆனது ஸ்பெயின் நாட்டின் செவில்லா எனுமிடத்தில் நடைபெற்றது.
  • உலகளாவிய நிதி விதிகளை மிகவும் நன்கு சீர் செய்வதற்கும், நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கான (SDG) சுமார் 4 டிரில்லியன் டாலர்கள் இடைவெளியைப் பூர்த்தி செய்வதற்குமான செவில்லா உறுதிப்பாட்டை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன.
  • FfD செயல்முறை என்பது நிலையான வளர்ச்சிக்கு, குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளுக்கு நிதியளிப்பதற்கான பல சிறந்த வழிகளைக் கண்டறிவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் (UN) தளமாகும்.
  • 2002 ஆம் ஆண்டில் மான்டெர்ரி ஒருமித்த கருத்து உடன்படிக்கையுடன் தொடங்கிய இந்த மாநாடானது, தோஹா (2008), அடிஸ் அபாபா (2015) மற்றும் இப்போது தற்போது செவில்லா (2025) ஆகிய இடங்களில் முக்கியக் கூட்டங்களை நடத்தியது.
  • இதில் ஐ.நா. சபையின் அனைத்து உறுப்பினர்களும், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் குடிமைச் சமூகம் போன்ற சில குழுக்களும் பங்கேற்றன.
  • இந்திய நிதியமைச்சர் மேம்பாட்டிற்கு என்று தனியார் துறைகளின் முதலீட்டினை ஈர்ப்பதற்கான 7 அம்சத் திட்டத்தை மாநாட்டில் முன் வைத்தார்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் SDG இலக்குகளுக்குத் தேவையான முதலீடுகளை ஆதரிக்கவும் அதற்கானத் தடைகளை நீக்கவும் உலகளாவிய நிதி விதிகளைச் சீர்திருத்துவதே FfD4 மாநாட்டின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்