சமூக ஊடகப் பெரு நிறுவனமான மெட்டா, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு என்ற தொழில் அமைப்போடுக் கூட்டு சேர்ந்துள்ளது.
இது இந்தியா முழுவதிலும் பெண்கள் தலைமையிலான ஐந்து லட்சம் சிறுகுறு வணிகங்களை ஆதரிப்பதற்கானதாகும்.
மெட்டா நிறுவனமானது, இந்த முயற்சியை FICCI அமைப்பின் 'Empowering the Greater 50%' என்ற ஒரு முன்னெடுப்புடன் கூட்டு சேர்ந்து, அதன் #SheMeansBusiness திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும்.
இம்முயற்சி பெண்களுக்கு ஆதரவான ஒரு சூழல் அமைப்பை உருவாக்கி, நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு பங்களிப்பவர்களாக மாறுவதற்காக வேண்டி அவர்களுக்கு ஊக்கமளிக்கும்.