இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 03 ஆம் தேதியன்று, நிதித் தொழில் துறை மேம்பாட்டு சபைக்கு (FIDC) சுய- ஒழுங்குமுறை அமைப்பு (SRO) அந்தஸ்தை வழங்கியது.
FIDC ஆனது, இந்தியா முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களை (NBFC) பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
SRO அமைப்புகள் ஆனது, தொழில்துறை தரநிலைகளை உருவாக்கவும், இணக்கத்தைக் கண்காணிக்கவும், நிதி அமைப்பில் உள்ள அபாயங்களை முன்கூட்டியே கண்டறிவதை ஆதரிக்கவும் உதவுகின்றன.
இந்த நடவடிக்கையானது நிதிச் சந்தைகளில் SRO அமைப்புகளை அங்கீகரிப்பதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் 2023 ஆம் ஆண்டு கட்டமைப்பைப் பின்பற்றுகிறது.
FIDC ஆனது தற்போது இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்து வங்கி சாரா கடன் துறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும்.