மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று Fit IndiaFreedom 2.0 எனும் தேசிய அளவிலான நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
ஆசாதி கா அம்ருத் மகோத்சவ் என்ற கொண்டாட்டத்திற்காக இது தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியானது 75 தனித்துவமிக்க இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 02 அன்று நிறைவடைகிறது.
இக்காலக் கட்டத்தின் போது ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஒவ்வொரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இந்த Freedom run என்ற இயக்கத்தில் பங்கேற்பர்.
இந்நிகழ்வானது புதுடெல்லியிலுள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கப்பட்டது.
இந்தியர்களை ஆரோக்கியமானவர்களாக மாற்ற ‘ஃபிட்னஸ் கி டோஸ் ஆதா கந்தா ரோஸ்’ (Fitness ki dose aadha ghanta roz) எனும் ஒரு முழக்கத்தோடு ஒவ்வொரு இல்லத்தையும் சென்றடையும் வண்ணம் இந்திய அரசானது இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
Fit India Freedom Run நிகழ்வின் முதல் பதிப்பானது 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தொடங்கி அக்டோபர் 02 அன்று முடிவடைந்தது.