TNPSC Thervupettagam

FNTA ஒப்பந்தம்

February 9 , 2026 3 days 49 0
  • எல்லைப்புற நாகாலாந்து பிராந்திய ஆணையத்தை (FNTA) உருவாக்குவதற்கான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒன்றிய அரசு கையெழுத்திட்டது.
  • இந்த ஒப்பந்தம் மத்திய உள்துறை அமைச்சகம், நாகாலாந்து அரசு மற்றும் ஈஸ்டர்ன் நாகாலாந்து மக்கள் அமைப்பு (ENPO) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது.
  • இந்த FNTA அமைப்பு, நாகாலாந்தின் கிழக்கு மாவட்டங்களான துயென்சாங், மோன், கிபைர், லாங்லெங், நோக்லாக் மற்றும் ஷாமடோர் ஆகிய ஆறு மாவட்டங்களை உள்ளடக்கும்.
  • இந்த ஆணையம் 46 துறைகள் மீதான அதிகாரப் பகிர்வையும், பிராந்திய வளர்ச்சிக்கான நிதி உதவியையும் பெறும்.
  • ENPO-ஆனது கிழக்கு நாகாலாந்தைச் சேர்ந்த எட்டு அங்கீகரிக்கப்பட்ட நாகா பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதோடு மேலும் இந்த ஒப்பந்தம் பிராந்தியத்தின் நிர்வாக மற்றும் மேம்பாட்டுத் தேவைகளை ஆதரிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஏற்பாடு, நாகாலாந்திற்கு என்று சிறப்பு வசதிகளை வழங்கும் இந்திய அரசியலமைப்பின் சரத்து 371(A)-ஐ பாதிக்காது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்