Fortune நாளிதழானது தனது 67வது Fortune 500 எனும் பட்டியலை அறிவித்துள்ளது.
இது ஒவ்வொரு நிதி ஆண்டின் வருவாயைப் பொருத்து அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய நிறுவனங்களை பட்டியலிடும் ஒரு வருடாந்திரப் பட்டியல் ஆகும்.
இப்போது 2020 ஆம் நிதியாண்டிற்கான பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
வால்மார்ட் நிறுவனமானது தொடர்ந்து 9வது ஆண்டாக இப்பட்டியலில் (2021 ஆம் ஆண்டு) முதலிடத்தைப் பெற்றுள்ளது.
அமேசான் நிறுவனமும் தனது இரண்டாமிடத்தைத் தக்க வைத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனமானது மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது.
CVS ஹெல்த் நிறுவனமானது நான்காமிடத்தில் உள்ளது.
ஒரு பெண் தலைமை நிர்வாகி (கரேன் லிஞ்ச்) அதிகாரியின் கீழ் இயக்கப் பட்டு உயர்தர வரிசையில் இடம் பெற்ற நிறுவனம் எனும் வரலாற்றை, CVS ஹெல்த் நிறுவனமானது படைத்துள்ளது.