Fortune நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டு குளோபல் 500 பட்டியலில் ஏழு இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
‘Fortune குளோபல் 500’ என்பது வணிக வருவாயின் அடிப்படையில் உலகின் 500 முன்னணி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் ஒரு வருடாந்திரப் பட்டியலாகும்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது வருவாய் அடிப்படையில் இப்பட்டியலில் உயர்தரவரிசையிலுள்ள ஒரு இந்திய நிறுவனமாகும்.
இது உலக அளவில் 155வது இடத்தில் உள்ளது.
உலகளவில் வால்மார்ட் நிறுவனமானது இந்தப் பட்டியலில் தொடர்ந்து 8 ஆண்டுகளாகவும் 1995 ஆம் ஆண்டு முதல் 16வது முறையாகவும் வருவாய் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.