ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் காங்கிரஸ் 2026 இல், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (C-DOT) தனது 'FraudPro' தொழில் நுட்பத்திற்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
FraudPro என்பது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (ML) அடிப்படையிலான ஒரு மோசடி கண்டறிதல் தளமாகும்.
இது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடையாளம் சார்ந்த மோசடிகள் மற்றும் போலி அலைபேசி இணைப்புகளைக் கண்டறிய உதவுகிறது.
இந்த தளம் தொலைத்தொடர்பு வலையமைப்புகளில் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.
இது தொலைத்தொடர்புத் துறையால் டிஜிட்டல் நுண்ணறிவு தளம் மற்றும் சஞ்சார் சாதி தளம் மூலம் பயன்படுத்தப்படுகிறது.