TNPSC Thervupettagam

FraudPro - செயற்கை நுண்ணறிவு (AI)

March 15 , 2026 14 hrs 0 min 45 0
  • ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் காங்கிரஸ் 2026 இல், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (C-DOT) தனது 'FraudPro' தொழில் நுட்பத்திற்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
  • FraudPro என்பது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (ML) அடிப்படையிலான ஒரு மோசடி கண்டறிதல் தளமாகும்.
  • இது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடையாளம் சார்ந்த மோசடிகள் மற்றும் போலி அலைபேசி இணைப்புகளைக் கண்டறிய உதவுகிறது.
  • இந்த தளம் தொலைத்தொடர்பு வலையமைப்புகளில் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.
  • இது தொலைத்தொடர்புத் துறையால் டிஜிட்டல் நுண்ணறிவு தளம் மற்றும் சஞ்சார் சாதி தளம் மூலம் பயன்படுத்தப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்