நிதி ஆயோக் அதன் வளர்ந்து வரும் புதியத் தொழில்நுட்ப மையத்தின் கீழ் Frontier 50 முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியது.
இது வளர்ந்து வரும் புதியத் தொழில்நுட்பக் களஞ்சியத்திலிருந்து புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துமாறு 50 உயர் இலட்சியமிக்க மாவட்டங்கள் / தொகுதிகளை ஆதரிக்கிறது.
இந்த முன்னெடுப்பு ஆனது உயர் இலட்சியமிக்க மாவட்டத் திட்டம் (ADP) மற்றும் உயர் இலட்சியமிக்கத் தொகுதிகள் திட்டம் (ABP) கருத்துருக்கள் முழுவதும் சேவைகளின் செறிவூட்டலை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வளர்ந்து வரும் புதியத் தொழில்நுட்ப மையம் ஆனது இந்தியாவை உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மீளுந்திறன் கொண்டதாக தயார்படுத்த மாபெரும் தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்பார்க்கிறது.
செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினி மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்பங்களை மதிப்பிடுவதற்கு அரசு, தொழில் துறை மற்றும் கல்வித்துறை நிபுணர்களை இது உள்ளடக்கியது.