TNPSC Thervupettagam
December 3 , 2025 10 days 51 0
  • இந்த அறிக்கை உலக வங்கியால் வெளியிடப்பட்டது.
  • நிதித் துறை மதிப்பீட்டுத் திட்டம் (FSAP) என்பது 1999 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றின் கூட்டு முன்னெடுப்பாகும்.
  • 2047 ஆம் ஆண்டிற்குள் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய நிதித் துறை சீர்திருத்தங்களை துரிதப்படுத்துவதற்கு இந்த 2025 ஆம் அண்டு அறிக்கை இந்தியாவை வலியுறுத்தியது.
  • 2017 ஆம் ஆண்டில் 144% ஆக இருந்த சொத்துக்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 175% ஆக உயர்ந்துள்ளதுடன் இந்தியாவின் நிதி அமைப்பு வலுவானதாகவும் பன்முகத் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
  • டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆனது இந்தியாவில் அணுகல், செயல்திறன் மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தியுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் ஒழுங்குமுறை முன்னேற்றம் மேற்பார்வையை வலுப்படுத்தியுள்ளது என்றாலும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFC) மேற்பார்வை சார்ந்த சவால்கள் உள்ளன.
  • பத்திரச் சந்தைகளை மேம்படுத்துதல், தனியார் மூலதனத்தைத் திரட்டுதல், NBFC ஒழுங்குமுறையை வலுப்படுத்துதல், டிஜிட்டல் சீர்திருத்தங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் பசுமை நிதியை நன்கு ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த அறிக்கையானது பரிந்துரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்