நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுமத்தின் (FSDC - Financial Stability and Development Council) 24வது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
நிதி அமைச்சர் FSDC குழுமத்தின் தலைவராக உள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் FSDC குழுமத்தின் துணைக் குழுவின் தலைவராக இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது நிதி நிலைப்புத் தன்மையைப் பராமரிப்பதற்கான பொறிமுறையை வலுப்படுத்தவும் நிறுவன மயமாக்கவும், இடை ஒழுங்குமுறை ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் மற்றும் நிதித்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வேண்டி இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஒரு உச்ச நிலை மன்றமாகும்.