இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையமானது (Food Safety and Standards Authority of India - FSSAI) வரைவு உணவுப் பெயரிடல் ஒழுங்குமுறைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடெங்கிலும் பொதித்து வைக்கப்பட்ட உணவுப் பண்டங்களில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றின் அளவு அதிகமாக இருந்தால் அந்தப் பண்டங்களின் மீது மிகப்பெரிய சிவப்பு பெயரிடலைக் கொண்டிருக்கும் என்பதை இந்தப் புதிய ஒழுங்கு முறைகள் குறிக்கின்றன.
இவை உணவுப் பொருட்களின் மீது பெயரிடப்பட்டுள்ள தூய, உண்மையான, இயற்கையான மற்றும் சர்க்கரையற்ற போன்ற உரிமைக் கோரிக்கைகளைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உணவுப் பொருட்களில் சர்க்கரையிலிருந்து பெறப்படும் ஆற்றல் 10 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தால், அப்பொருள் சிவப்பு அடையாளத்தைக் கொண்டிருக்கும்.
மேலும் மாறுபக்க கொழுப்பானது 1 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆற்றலைக் கொடுத்தால் சிவப்பு நிற அடையாளக் குறியிடுவது கட்டாயமாகும்.