FSSAI ஆணையத்தின் சரியான உணவு முறைச் சான்றிதழ் – கடலூர்
June 29 , 2023 908 days 525 0
கடலூரில் உள்ள திருப்பாப்புலியூர் உழவர் சந்தையானது, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சரியான உணவு முறை (பழங்கள் மற்றும் காய்கறி சந்தை) சான்றிதழைப் பெற்றுள்ளது.
இந்த உழவர் சந்தையானது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தினால் நிர்ணயிக்கப்பட்டப் பல்வேறு அளவுருக்களைப் பூர்த்தி செய்ததை அடுத்து இந்தச் சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது.
பள்ளிகள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பணியிடங்கள் மற்றும் உணவுச் சந்தைகள் போன்ற வளாகங்களில் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நீடித்த நிலையான உணவு விநியோகத்தினை நன்கு ஊக்குவிப்பதை சரியான உணவு முறை என்ற முன்னெடுப்பானது நோக்கமாகக் கொண்டுள்ளது.