FSSAI இன் மாறுபக்க கொழுப்புகள் அல்லாத பொருள்களுக்கான இலட்சினை
October 8 , 2019 2128 days 1501 0
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (Food Safety & Standards Authority of India - FSSAI) மாறுபக்க கொழுப்புகள் அல்லாத பொருள்களுக்கான ஒரு இலட்சினையை வெளியிட்டார்.
இது புது தில்லியில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் 8வது சர்வதேச சமையல்காரர்களின் மாநாட்டின் போது தொடங்கப்பட்டது.
FSSAI இன் ‘சரியான உணவு உண்ணும் இயக்கத்தை’ ஊக்குவிக்க இந்த இலட்சினை தொடங்கப் பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் “மாறுபக்க கொழுப்புகள் அல்லாத பொருள்களுக்கான சமையல்காரர்கள்” என்ற வாசகத்தையும் வெளியிட்டார்.