FSSAI உரிமங்களுக்கான வாழ்நாள் செல்லுபடியாகும் கால அளவு
March 17 , 2026 163 days 231 0
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (FSSAI) வழங்கப்படும் உரிமங்களுக்கு வாழ்நாள் செல்லுபடியாகும் காலத்தை இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அங்கீகரித்துள்ளது.
உணவு வணிகர்கள் இனி தங்கள் உரிமங்களைத் திரும்பத் திரும்பப் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பதோடு இது காகிதப் பணிகள் மற்றும் இணக்கச் செலவுகளைக் குறைக்கும்.
அடிப்படைப் பதிவுக்கான விற்பனை வரம்பு சுமார் ₹12 லட்சத்திலிருந்து ₹1.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாநகராட்சிகள் அல்லது நகர விற்பனைக் குழுக்களில் பதிவுசெய்யப்பட்ட தெருவோர உணவு விற்பனையாளர்கள், இனி தானாகவே FSSAI அமைப்பின் கீழ் பதிவு செய்யப் பட்டவர்களாகக் கருதப்படுவார்கள்.
உணவுப் பாதுகாப்புக் கண்காணிப்பை மேம்படுத்த அபாய அடிப்படையிலான, தொழில் நுட்பம் சார்ந்த உணவு ஆய்வு முறையையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தும்.