இந்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயச் சங்கம் (Food Safety Standards Association of India - FSSAI) அதன் பொதுக் குறியிடல் ஒழுங்குமுறையிலிருந்துப் பொட்டல முகப்புக் குறியிடல் முறை (Front Of Packet Labelling - FoPL) நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
FoPL ஆனது கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு அளவுகள் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் குறித்து நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இது பச்சை (சைவ உணவுகள்) மற்றும் சிவப்பு (அசைவ உணவுகள்) உணவு வகைகளை நுகர்வோருக்கு அடையாளம் காண உதவுகின்றது.
இதில் உணவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுருக்கக் குறிகாட்டிகள் போன்றவற்றின் சித்திரப் பிரதிநிதித்துவமும் அடங்கும்.
FoPL பற்றி
FoPL என்பது நுகர்வோருக்கு ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்ய உதவும் வகையிலான கருவியாகும்.
இது இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை (குறியிடல் மற்றும் காட்சிப்படுத்துதல்) விதிமுறைகள் என்பதின் வரைவுக்குள் சேர்க்கப் பட்டுள்ளது.