நிதி ஆயோக் அமைப்பின் மேம்பட்டத் தொழில்நுட்ப மையம், இரு பரிமாண (2D) பொருட்கள் குறித்த அதன் Future Front Quarterly Insights என்ற அறிக்கைத் தொடரின் நான்காவது பதிப்பை வெளியிட்டது.
இந்த அறிக்கையானது பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்துடன் (IISc) இணைந்து உருவாக்கப்பட்டது.
இரு பரிமாணப் பொருட்கள் எஃகினை விட 200 மடங்கு வலிமையானவை மற்றும் தாமிரத்தை விட மிகவும் திறம் மிக்க வகையில் மின்சாரத்தைக் கடத்துகின்றன.
இந்தப் பொருட்கள் மனித முடியின் அகலத்தில் சுமார் 1/80,000 பங்கு ஆகும்.