G-20 அமைப்பின் புத்தொழில் பணிக் கட்டுப்பாட்டுக் குழுவின் தொடக்கக் கூட்டம் என்பது சமீபத்தில் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது.
இந்தப் பெயர் குறிப்பிடுவது போல, புத்தொழில் 20 பணிக் கட்டுப்பாட்டுக் குழுவில் G-20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளில் உள்ள முன்னணி புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.
புத்தொழில் 20 என்பது புத்தாக்கம், தொழில்முனைவு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய பலவற்றின் மீது கவனம் செலுத்துகிறது.
இது G-20 உறுப்பினர் நாடுகளின் புத்தொழில் நிறுவனங்களுக்கும், உலகின் பிற வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கும் இடையே உள்ள பல இடைவெளிகளைக் குறைப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
G20 உறுப்பினர்கள் தவிர, ஒன்பது சிறப்பு விருந்தினர் நாடுகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன.
2023 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள G-20 உச்சி மாநாட்டினை இந்தியா நடத்த உள்ளது.
இந்த உச்சி மாநாட்டினை வெற்றிகரமாக நடத்துவதற்காக, பல பணிக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் உருவாக்கப் பட்டு வருகின்றன.
இக்குழுவில் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர்.