TNPSC Thervupettagam

G20 உச்சி மாநாடு 2025 - கூட்டுப் பிரகடனம்

November 27 , 2025 16 hrs 0 min 32 0
  • அமெரிக்காவின் புறக்கணிப்பு இருந்த போதிலும், ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாட்டில் G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் 122 அம்ச கூட்டுப் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டனர்.
  • இந்தப் பிரகடனம் ஆனது உச்சி மாநாட்டின் இறுதியில் அல்லாமல், வழக்கத்திற்கு மாறாக அதன் தொடக்கத்திலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இது தீவிரவாதத்தை "அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும்" கடுமையாகக் கண்டித்தது.
  • ஐ.நா. கொள்கைகளுடன் ஒருங்கிணைந்து, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளை மாற்றுவதற்கு எந்தவொரு நாடும் அதன் பலத்தையோ அல்லது அச்சுறுத்தல்களையோ பயன்படுத்தக்கூடாது என்பதை இந்த ஆவணம் மீண்டும் உறுதிப் படுத்தியது.
  • இது ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தியதோடு, பலதரப்பு ஒத்துழைப்பு, பருவநிலை நடவடிக்கை, பேரிடர் மீள்தன்மை மற்றும் கடன் நிலைத் தன்மைக்கு அழைப்பு விடுத்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்