புது டெல்லி மாநகராட்சிச் சபையானது (NDMC), இரண்டு நாட்கள் அளவிலான G20 அமைப்பின் கருத்துரு அடிப்படையிலான மலர்த் திருவிழாவினை ஏற்பாடு செய்து உள்ளது.
இந்த விழாவானது, G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் மற்றும் சிறப்பு விருந்தினர் நாடுகளின் ஒத்திசைவினை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
G20 அமைப்பின் நான்கு உறுப்பினர் நாடுகளான சீனா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் நெதர்லாந்து ஆகியவை புது டெல்லி மாநகராட்சிச் சபையின் G20 மலர்த் திருவிழாவில் பங்கேற்கின்றன.
இந்தத் திருவிழாவில் தேசிய மலர்கள் அல்லது G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் மற்றும் விருந்தினர் நாடுகளின் முக்கிய மலர்த் தோட்டங்கள் ஆகியவற்றின் ஓவியம் அல்லது புகைப்படங்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப் பட்டன.