TNPSC Thervupettagam

G20 FMCBG கூட்டம் 2026

September 11 , 2026 2 days 40 0
  • இந்தியாவின் G20 தலைமையின் கீழ் மூன்றாவது G20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (FMCBG) கூட்டம் குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்றது.
  • உலகப் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம், நிலையான நிதி மற்றும் உள்கட்டமைப்பு, சர்வதேச நிதிக் கட்டமைப்பு, சர்வதேச வரி விதிப்பு மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகிய ஐந்து முக்கியப் பகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
  • நிதி உள்ளடக்கத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) மற்றும் G20 நிதி உள்ளடக்க செயல் திட்டம் (FIAP) 2024-26 குறித்த பரிந்துரைகளுக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.
  • வளர்ந்து வரும் மற்றும் வளரும் பொருளாதார நாடுகளின் கவலைகள் உட்பட உலகளாவிய கடன் பாதிப்புகள், பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் (MDBs), பருவநிலை நிதி மற்றும் கிரிப்டோ சொத்து ஒழுங்குமுறை ஆகியவற்றில் இக்கூட்டம் கவனம் செலுத்தியது.
  • நிதி உள்ளடக்கத்திற்கான உலகளாவிய கூட்டாண்மையின் (GPFI) இணைத் தலைவராக இந்தியா நியமிக்கப்பட்டுள்ளதுடன், 2024-26 ஆம் ஆண்டிற்கான புதிய FIAP-ஐச் செயல்படுத்தவும் இது உதவும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்