ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற G20 அமைப்பின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் ஆறு புதிய உலகளாவிய முன்னெடுப்புகளை அறிவித்தார்.
இந்த முன்னெடுப்புகள் உலகளாவிய மேம்பாடு, சுகாதாரத் தயார்நிலை, தரவுப் பகிர்வு மற்றும் வளப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
உலகளாவியப் பாரம்பரிய அறிவுக் களஞ்சியம் ஆனது பாரம்பரிய அறிவுக்கான பகிரப் பட்ட சர்வதேச தளமாகச் செயல்படும்.
ஆப்பிரிக்கா திறன் பெருக்கத் திட்டம் ஆனது ஆப்பிரிக்காவில் இளையோர்களின் திறன் மேம்பாட்டை ஆதரிக்க ஒரு மில்லியன் சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும்.
G20 உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கை குழுவில் உலகளாவிய சுகாதார அவசரநிலைகளின் போது நிலை நிறுத்தக் கூடிய அனைத்து G20 நாடுகளின் சுகாதார நிபுணர்கள் இடம் பெறுவர்.
போதைப்பொருள்-தீவிரவாத தொடர்பினை எதிர்ப்பதற்கான முன்னெடுப்பு போதைப் பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாதத்திற்கு இடையிலான தொடர்புகளை சீர்குலைக்க ஒருங்கிணைந்த நடவடிக்கையை செயல்படுத்தும்.
தடையற்ற செயற்கைக்கோள் தரவுக் கூட்டாண்மை G20 நாடுகளின் விண்வெளி நிறுவனங்களின் செயற்கைக் கோள் தரவை வளர்ந்து வரும் நாடுகளுக்குக் கிடைக்கப் பெறச் செய்யும்.
முக்கியக் கனிமங்கள் சுழற்சி முன்னெடுப்பு ஆனது மறு சுழற்சி, நகர்ப்புறச் சுரங்கம் மற்றும் முக்கிய கனிமங்களின் சுழற்சி முறைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும்.