அமெரிக்காவின் புறக்கணிப்பு இருந்த போதிலும், ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாட்டில் G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் 122 அம்ச கூட்டுப் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டனர்.
இந்தப் பிரகடனம் ஆனது உச்சி மாநாட்டின் இறுதியில் அல்லாமல், வழக்கத்திற்கு மாறாக அதன் தொடக்கத்திலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இது தீவிரவாதத்தை "அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும்" கடுமையாகக் கண்டித்தது.
ஐ.நா. கொள்கைகளுடன் ஒருங்கிணைந்து, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளை மாற்றுவதற்கு எந்தவொரு நாடும் அதன் பலத்தையோ அல்லது அச்சுறுத்தல்களையோ பயன்படுத்தக்கூடாது என்பதை இந்த ஆவணம் மீண்டும் உறுதிப் படுத்தியது.
இது ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தியதோடு, பலதரப்பு ஒத்துழைப்பு, பருவநிலை நடவடிக்கை, பேரிடர் மீள்தன்மை மற்றும் கடன் நிலைத் தன்மைக்கு அழைப்பு விடுத்தது.