TNPSC Thervupettagam

G20 ஜோகன்னஸ்பர்க் உச்சி மாநாடு 2025

November 29 , 2025 13 days 148 0
  • ஆப்பிரிக்கக் கண்டத்தில் முதன்முறையாக தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 20வது G20 தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது.
  • தென்னாப்பிரிக்க அதிபருடனான அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக அமெரிக்க அதிபர் இந்த உச்சிமாநாட்டைப் புறக்கணித்தார்.
  • உலகத் தலைவர்கள் ஒருங்கிணைந்திருத்தல் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வலியுறுத்துகின்ற உபுண்டு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரகடனத்தை இங்கு ஏற்றுக் கொண்டனர்.
  • சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழுவில் 25வது இடம் ஆனது ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிக்காக உருவாக்கப்பட்டது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 300 மில்லியன் ஆப்பிரிக்கர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக இந்த உச்சி மாநாடு ‘திட்டம் 300’ என்ற திட்டத்தினை அறிமுகப் படுத்தியது.
  • நிலையான விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்வதற்கும் உள்ளூர்ச் செயலாக்கத்தை ஊக்குவிப்பதற்கும் G20 முக்கியக் கனிமக் கட்டமைப்பு அறிமுகப் படுத்தப் பட்டது.
  • உணவுக்கான உரிமையை மீண்டும் உறுதிப்படுத்திய இந்த உச்சி மாநாடு பட்டினியை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்துவதைக் கண்டித்தது.
  • தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளவும் நெறிமுறை சார்ந்த AI பயன்பாட்டை உறுதி செய்யவும் ஆப்பிரிக்காவுக்கான AI முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.
  • இளையோர் வேலைவாய்ப்பு மற்றும் பாலின சமத்துவ இலக்குகள் நிர்ணயிக்கப் பட்டன: 2030 ஆம் ஆண்டிற்குள் NEET (வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சியைச் சார்ந்தது அல்ல) 5% குறைத்தல் மற்றும் தொழிலாளர் பங்கேற்பில் பாலின இடைவெளியை 25% குறைத்தல்.
  • பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள பகுதிகளைச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் சீர்திருத்தத்தினை மேற்கொள்ள இந்த உச்சி மாநாடு அழைப்பு விடுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்