மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சரான பியூஷ் கோயல் அவர்கள் ஜி 20 அமைப்பிற்கான இந்தியாவின் ஷெர்பாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுரேஷ் பிரபுவுக்குப் பதிலாக பியூஷ் கோயல் இந்தியாவின் ஷெர்பாவாக நியமிக்கப் பட்டுள்ளார்.
அடுத்த ஜி 20 உச்சி மாநாடு (2021) அக்டோபரில் இத்தாலிய அதிபர் தலைமையில் நடைபெறும்.
இந்தியாவானது டிசம்பர் 1, 2022 அன்று ஜி 20 தலைமையை ஏற்று 2023 ஆம் ஆண்டில் ஜி 20 தலைவர்களின் உச்சி மாநாட்டை முதல் முறையாக நடத்தும்.
இந்தியாவானது டிசம்பர் 2021 முதல் நவம்பர் 2024 வரை ஜி 20 முக்கூட்டு அமைப்பின் (முந்தைய, தற்போதைய மற்றும் அடுத்த ஜி 20 தலைமை நாடுகள்) ஒரு பகுதியாக இருக்கும்.
2022 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவும் 2024 ஆம் ஆண்டில் பிரேசில் நாடும் ஜி 20 அமைப்பிற்குத் தலைமை தாங்கும்.